யாழ்ப்பாணத்தில் டெங்குத் தொற்று தீவிரமாகப் பரவிவரும் நிலையில், டெங்குக் கட்டுப்பாட்டுப் பணிகளில் தேர்ச்சிபெற்ற குழுவினர் யாழ்ப்பாண நகரப் பகு...
யாழ்ப்பாணத்தில் டெங்குத் தொற்று தீவிரமாகப் பரவிவரும் நிலையில், டெங்குக் கட்டுப்பாட்டுப் பணிகளில் தேர்ச்சிபெற்ற குழுவினர் யாழ்ப்பாண நகரப் பகுதிகளில் நேற்று (13) கள ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டனர்.
கொழும்பு உட்பட பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் வந்துள்ள மருத்துவர்களும் இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் டெங்கு தீவிரமாகப் பரவி வருகின்றது. குறிப்பாக யாழ்ப்பாணம் நகரப் பகுதிகளிலேயே டெங்குப் பரவல் அதிதீவிரமாக உள்ள நிலையில், டெங்குக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் தேர்ச்சிபெற்ற குழுவினர் யாழ்ப்பாணம் நகரப் பகுதிகளில் பரவலாக கள ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டனர்.
டெங்குக் கட்டுப்பாட்டுக் குழுவினருக்கு மேலதிகமாக, வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸூம் டெங்கு தொடர்பான கள ஆய்வுப் பணிகளில் நேரடியாக ஈடுபட்டார். யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் டெங்குத் தொற்று இலகுவாகப் பரவக்கூடிய ஏதுநிலையில் இருக்கும் பகுதிகள் அவதானிக்கப்பட்டு விரைவில் டெங்கைக் கட்டுப்படுத்தக்கூடிய திட்டங்களாக சில உத்தரவுகளை அவர் பிறப்பித்தார்.
யாழ்ப்பாணம் நகரப் பகுதிகளில் வெள்ளம் வடிந்தோட முடியாத வகையிலும், பராமரிப்புக்கு கடினமான வகையிலும் அமைக்கப்பட்டுள்ள கால்வாய்களில் இலகுவான பராமரிப்பை மேற்கொள்ளும் படியான மறுகட்டுமானம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.