யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பகுதியில் உள்ள பொலிஸ் விடுதியில் குடிநீர் சுத்திகரிப்பு தொகுதி அமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது. பொலிஸ்...
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பகுதியில் உள்ள பொலிஸ் விடுதியில் குடிநீர் சுத்திகரிப்பு தொகுதி அமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது.
பொலிஸ் திணைக்களத்தின் 20 இலட்சம் நிதிப்பங்களிப்பில் வடமாகாண கடற்படை கட்டளைத் தளபதி ரியல் அட்மிரல் அருண தென்னக்கோனின் தலைமையிலான கடற்படையினரின் தொழில்நுட்ப மற்றும் சரீர ஒத்துழைப்புடன் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஹிந்த குணரத்ன, வடமாகாண கடற்படை கட்டளைத் தளபதி ரியல் அட்மிரல் அருண தென்னக்கோன், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், கடற்படையினர் என பலரும் கலந்துகொண்டனர்.
நீண்டகாலமாக தீர்க்கப்படாது இருந்த குடிநீர் பிரச்சினைக்கு இதன் மூலம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வடமாகாண கடற்படை கட்டளைத் தளபதி ரியல் அட்மிரல் அருண தென்னக்கோன் இன்றுடன் தனது சேவையில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்கிறார்.