யாழ்ப்பணம் கோப்பாய் செல்வபுரம் பகுதியில் கஞ்சா மற்றும் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் பொலிசாரின் விசேட சுற்றி வளைப்பின் போது ...
யாழ்ப்பணம் கோப்பாய் செல்வபுரம் பகுதியில் கஞ்சா மற்றும் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் பொலிசாரின் விசேட சுற்றி வளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
நீண்ட நாட்களாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாக பொலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து இன்று(08) சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது குறித்த நபரின் வீட்டில் இருந்து 100 கிராம் கஞ்சாவும் 10 லீற்றர் கசிப்பும் ஒரு தொகை பணமும் மீட்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகருக்கு கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மற்றும் கோப்பாய் பொலிஸாரும் இணைந்து குறித்த கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.