வடமாகாணத்தில் முதல்முறையாக யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் பெருந்தொகை பெறுமதியான அபின் போதைப்பொருள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. வல்ல...
வடமாகாணத்தில் முதல்முறையாக
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் பெருந்தொகை பெறுமதியான அபின் போதைப்பொருள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
வல்லிபுரம் கடற்கரைப் பகுதியில் மூன்று பொதிகளில் இருந்து குறித்த போதைப்பொருட்கள் திங்கட்கிழமை (08) காலை மீட்கப்பட்டுள்ளது
48 கிலோ நிறை கொண்ட அபின் போதைப்பொருளும் 28 கிலோ நிறை கொண்ட கேரள கஞ்சாவும் மீட்கப்பட்டது.
கைப்பற்றப்பட்ட அபின் போதைப்பொருளின் பெறுமதி
வல்லிபுரம் கடற்கரைப் பகுதியில் மூன்று பொதிகளில் இருந்து குறித்த போதைப்பொருட்கள் திங்கட்கிழமை (08) காலை மீட்கப்பட்டுள்ளது
நாடாளாவியரீதியில் பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்பில் யுக்திய போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், காங்கேசன்துறை பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் வழிகாட்டலில் பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கமைய குறித்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்க தலைமையிலான பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த மீட்பு சம்பவம் தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வடமாகாணத்தில் அபின் போதைப்பொருள் பாரியளவில் கைப்பற்றப்படுவது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்படுகிறது.