விமான நிலைய அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரும்...
விமான நிலைய அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக ராகம வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த வாகனம் கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான நிலையில் அமைச்சர் உட்பட மூவர் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இராஜாங்க அமைச்சரின் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் உயிரிழந்துள்ளதாகவும், சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கை பொலிஸாரின் அறிக்கையின்படி, இந்த விபத்து அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றதாகவும், இராஜாங்க அமைச்சர் பயணித்த வாகனம் கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த சரக்கு கொள்கலன் ட்ரக்கின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.