புதிதாக பொறுப்பேற்ற இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்றையதினம் (16) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார். நயினாதீவுக்கு சென்ற உயர்...
புதிதாக பொறுப்பேற்ற இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்றையதினம் (16) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்.
நயினாதீவுக்கு சென்ற உயர்ஸ்தானிகர் நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில், நயினாதீவு நாகவிகாரைக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டதுடன் இந்திய திட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கலப்பு மின் திட்ட இடங்களையும் பார்வையிட்டு ஆராய்ந்தார்.
தொடர்ந்து காங்கேசன்துறை துறைமுகம், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்ற உயர்ஸ்தானிகர் அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்தார்.
யாழ்ப்பாணப் பண்பாட்டு மையத்தில் உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் இன்று மாலை உயர்ஸ்தானிகர் கலந்து கொள்ளவுள்ளதுடன் யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில், மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ள தியாகப்பிரம்மம் சற்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கான “இசை ஆராதனை” நிகழ்விலும் பங்கேற்பார்.
தனியார் விடுதியில் நடைபெறும் இரவு விருந்தில் அரசியல் பிரமுகர்கள், உயர் அரச அதிகாரிகள், பல்கலைக்கழக நிர்வாகத்தினர், வர்த்தக பிரமுகர்கள், அரசியல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட அழைக்கப்பட்ட விருந்தினர்களை உயர்ஸ்தானிகர் சந்திக்கவுள்ளார்.
இந்திய உயர்ஸ்தானிகர் நேற்று மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்தார்.