போலியாக தயாரிக்கப்பட்ட கிரேக்க சுற்றுலா விசாவினூடாக வெளிநாடு செல்ல முயற்சித்த இலங்கையர்கள் இருவர் குடிவரவு குடியகல்வு பாதுகாப்பு பிரிவின் அத...
போலியாக தயாரிக்கப்பட்ட கிரேக்க சுற்றுலா விசாவினூடாக வெளிநாடு செல்ல முயற்சித்த இலங்கையர்கள் இருவர் குடிவரவு குடியகல்வு பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகளினால் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரசேதங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் இருவரும் இன்று (23) காலை தோகாவை நோக்கி பயணிப்பதற்காக விமான நிலையத்துக்கு வருகைத்தந்துள்ளதுடன், பணிகள் விமான சேவை அனுமதிக்காக அவர்களின் ஆவணங்களை சமர்ப்பித்தபோது அவர்களிடமிருந்த கிரேக்க சுற்றுலா விசா போலியாக தயாரிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.
இந்தியாவுக்குச் சென்று தரகர் ஒருவரினூடாக அந்த விசாவை தயாரித்து கொண்டுள்ளமை அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமானநிலை குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.