யாழ்ப்பாணம் – புத்தூரில் உள்ள வீடொன்று நேற்றையதினம் இரவு தீப்பிடித்து எரிந்து சேதமானது. புத்தூர் கலைமதிப் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (...
யாழ்ப்பாணம் – புத்தூரில் உள்ள வீடொன்று நேற்றையதினம் இரவு தீப்பிடித்து எரிந்து சேதமானது.
புத்தூர் கலைமதிப் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (26) இரவு 8.30 மணியளவில் தீப்பரவியது.
இதனையடுத்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
உயிர் சேதம் ஏதும் ஏற்படாத நிலையில் மின்கசிவு காரணமாகவே வீடு தீப்பிடித்து எரிந்தாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக அச்சுவேலிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.