ஏடன் வளைகுடாவில் தமது தாக்குதலுக்கு இலக்கான பிரிட்டன் கப்பல் கடலில் மூழ்கியுள்ளதாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக அ...
ஏடன் வளைகுடாவில் தமது தாக்குதலுக்கு இலக்கான பிரிட்டன் கப்பல் கடலில் மூழ்கியுள்ளதாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அந்த அமைப்பின் இராணுவ செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சரியா தெரிவிக்கையில்,
தமது தாக்குதலை அடுத்து கப்பலில் இருந்தவர்கள் கப்பலைக் கைவிட்டதால் தற்போது இந்த கப்பல் பெரும் சேதம் அடைந்து மூழ்கியதாக தெரிவித்துள்ளார்.
ஹவுத்திகளின் தாக்குதலால்
முன்னதாக, செங்கடலை ஏடன் வளைகுடாவுடன் இணைக்கும் பாப் எல்-மண்டேப் ஜலசந்தி வழியாக பெலிஸ் கொடியுடன் கூடிய இங்கிலாந்து கப்பலான ரூபிமார் சரக்குக் கப்பல், ஹவுதிகளின் தாக்குதலுக்கு உள்ளானதாக ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கை மையம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.