நிர்ணயிக்கப்பட்ட நிறைக்கு ஏற்ப பாண் விற்பனை செய்யாத வர்த்தகர்களை கண்டறிவதற்கு விசேட சோதனை நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வர்...
நிர்ணயிக்கப்பட்ட நிறைக்கு ஏற்ப பாண் விற்பனை செய்யாத வர்த்தகர்களை கண்டறிவதற்கு விசேட சோதனை நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பாணின் நிகர எடை 450 கிராமாக இருக்க வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை அண்மையில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
அத்துடன், பாண் ஒன்றின் நிகர எடையை விட 13.5 கிராம் வித்தியாசம் காணப்படலாம் என குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் அரைவாசி பாணின் நிகர எடை 225 கிராம் எனவும், அதில் 9 கிராம் வித்தியாசம் காணப்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.