யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட செயலாளர்களின் ஒரு வருட சேவை நீடிப்பு அமைச்சரவையால் நிராகரிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபவதி ...
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட செயலாளர்களின் ஒரு வருட சேவை நீடிப்பு அமைச்சரவையால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் கடந்த 12 ஆம் திகதியுடன் ஓய்வுபெற்ற நிலையில் கிளிநொச்சி மாவட்டத்துக்கான மாவட்ட செயலாளர் பதவி வெற்றிடமாகியுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் எதிர்வரும் மார்ச் மாதம் 8ஆம் திகதி ஓய்வுபெற்றுச் செல்லவுள்ளார்.
இந்நிலையில் இருவருக்கும் மேலும் ஒரு வருடம் சேவை நீடிப்பு வழங்க நேற்றைய அமைச்சரவைக்குப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.
இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட சேவை நீடிப்பை வழங்கும் பட்சத்தில் பாதிக்கப்படும் அரச உத்தியோகத்தர் எவராவது ஒருவர் நீதிமன்றத்தை நாடினால் அதனை எதிர்கொள்வது கடினம் என்று சுட்டிக் காட்டப்பட்டதன் அடிப்படையில் சேவை நீடிப்பு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த ஜனவரி 4 ஆம் திகதி யாழ்ப்பாணம் வந்த வேளையில் இரு மாவட்ட செயலாளர்களும் அமைச்சர் ஒருவரின் சிபார்சுடன் சேவை நீடிப்பு கோரிக்கை சமர்ப்பித்தனர் என்ற செய்தி ஏற்கனவே வெளிவந்திருந்தது.