யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நோயாளர்களின் அசௌகரியங்களை தவிர்க்கும்பொருட்டு டிஜிட்டல் தொடுதிரைகள் அமைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா ...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நோயாளர்களின் அசௌகரியங்களை தவிர்க்கும்பொருட்டு டிஜிட்டல் தொடுதிரைகள் அமைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வரும் பொது மக்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றுவதற்காக இடங்களை தேடி அலையும் நிலையினை மாற்றும் நோக்கத்தோடு விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு பகுதிக்கு முன்னால் டிஜிட்டல் தொடுதிரை சம்பிரதாய பூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
இதன்போது வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி உள்ளிட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
இவ் டிஜிட்டல் தொடுதிரையில் பொதுமக்கள் வைத்தியசாலை தொடர்பான தவல்கள் அனைத்தினையும் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.