இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவாகியிருக்கும் சிவஞானம் சிறீதரனை மரியாதை நிமித்தம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன்...
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவாகியிருக்கும் சிவஞானம் சிறீதரனை மரியாதை நிமித்தம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள சிறீதரனின் இல்லத்தில் இக்கலந்துரையாடல் இன்று காலை இடம்பெற்றது.
இதன்போது இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவராக தெரிவாகியிருக்கும் சிவஞானம் சிறீதரனுக்கு ஜீவன் தொண்டமான் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.