யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் வசமிருந்த யாழ்ப்பாணத்தின் 5 கிராம சேவகர் பிரிவுகளுக்குச் சொந்தமான 234 ஏக்கர் காணி ஜனாதிபதி ரணில் விக்ரம...
யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் வசமிருந்த யாழ்ப்பாணத்தின் 5 கிராம சேவகர் பிரிவுகளுக்குச் சொந்தமான 234 ஏக்கர் காணி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் இன்று (22) பயிர் செய்கைக்காக விவசாயிகளிடம் கையளிக்கப்பட்டது.
இலவசமாக 2 மில்லியன் காணி உறுதிகளை வழங்குவதற்கான உறுமய தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், 408 பேருக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணம் - ஒட்டகப்புலத்தில் நடைபெற்றது.
ஜே- 244 வயாவிளான் கிழக்கு, ஜே-245 வயாவிளான் மேற்கு, ஜே-252 பலாலி தெற்கு, ஜே-254 பலாலி வடக்கு, ஜே-253 பலாலி கிழக்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவில் இருந்து காணிகள் விடுவிக்கப்பட்டது.
அச்சுவேலி வயாவிளான் பகுதி ரெயிலர் கடை சந்திப்பகுதியில் குறித்து நிகழ்வு இன்று இடம்பெற்றது.