இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 32 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு மற்ற...
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 32 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு மற்றும் தலைமன்னார் கடற்பரப்புகளில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார்.
இதற்கமைய நெடுந்தீவு கடற்பரப்பில், 3 படகுகளில் பிரவேசித்த 25 பேரும், தலைமன்னார் கடற்பரப்பில் 2 படகுகளில் இருந்த 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அவர்கள் காங்கேசன்துறை - மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் அவர்களை ஊர்காவற்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.