ரஷ்யாவில் நடந்த அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் 88% வாக்குகளைப் பெற்று மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் மீண்டும் அதிப...
ரஷ்யாவில் நடந்த அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் 88% வாக்குகளைப் பெற்று மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் மீண்டும் அதிபர் பதவியில் தொடர்வது உறுதியாகியுள்ளது.
1999இல் அதிகாரத்திற்கு வந்த புதின், ரஷ்யாவில் மிகவும் சக்திவாய்ந்த நபராக உருவெடுத்துள்ளார். ரஷ்யா மற்றும் சோவியத் ஒன்றியத்தில் கடந்த 200 ஆண்டுகளில் அதிக காலம் தலைவராக இருந்தவர்கள் பட்டியலில் ஜோசப் ஸ்டாலினை புதின் ஓவர்கேட் செய்துள்ளார்.
உக்ரைன் போருக்குப் பிறகு அங்கே நடக்கும் முதல் தேர்தலாக இது இருக்கும் நிலையில், புதின் மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார்.
ரஷ்யாவில் உள்ள எதிர்க்கட்சிகள் யாரையும் போட்டியிட அனுமதிக்க மாட்டார்களாம். வேறுமன பெயரளவில் சில கட்சிகளை மட்டும் போட்டியிட அனுமதிக்கிறார்கள் எனப் புகார் இருக்கும். இந்த முறையும் கூட புதினை வலிமையாக எதிர்க்கும் அளவுக்கு எந்தவொரு வேட்பாளரும் களத்தில் இல்லை என்பதே உண்மை.