சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை மூன்று நாட்களுக்கு விவாதிக்க இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்ட...
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை மூன்று நாட்களுக்கு விவாதிக்க இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான முதல் நாள் விவாதம் இன்று நாடாளுமன்றில் நடைபெற்றது.
இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ”முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தோற்கடித்துவிட்டதாக ஆளும் தரப்பினர் தெரிவித்தனர். ஆனால், கெஹலிய ரம்புக்வெல்ல இன்று எங்கே இருக்கிறார்?இதே நிலைமை தான் சபாநாயகர் விடயத்திலும் ஏற்படும்.
அவர் மாத்திரமல்ல, இந்தப் பிரேரணைக்கு எதிராக வாக்களுக்கும் ஒவ்வொரு உறுப்பினரும், இதுவிடயத்தில் போதுமான அறிவில்லை என்பதையே காண்பிப்பார்கள். இணைய பாதுகாப்பு சட்டம்நிறைவேற்றப்பட்ட விதம் பிழையானது என்பதை கற்றறிந்த அனைவரும் அறிவார்கள்.
இது நிறைவேற்றப்பட்டமை அரசமைப்புக்கு முரணானது. எனவே, பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கும் அனைவருக்கும் மக்கள் தேர்தல் ஊடக தக்க பதிலை வழங்குவார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.