சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார். அக்கட்சியின் நிறைவேற்றுச் சபைக் கூட்டம் இன்று பிற்பகல் கொ...
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.
அக்கட்சியின் நிறைவேற்றுச் சபைக் கூட்டம் இன்று பிற்பகல் கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க, பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்தார்.
முன்னதாக, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.