ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ...
ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அத்துடன், குறித்த கலந்துரையாடல்களின் முன்னேற்றம் குறித்து எதிர்காலத்தில் ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.