லோகேஷ் உடனான லியோ படத்தின் வெற்றிக்குப் பின் விஜய், வெங்கட் பிரபுவு இயக்கத்தில் விஜய் நடிக்கும் தான் “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” சுருக்கம...
லோகேஷ் உடனான லியோ படத்தின் வெற்றிக்குப் பின் விஜய், வெங்கட் பிரபுவு இயக்கத்தில் விஜய் நடிக்கும் தான் “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” சுருக்கமாக GOAT.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இதில் கம்பேக் கொடுத்துள்ளனர். விஜய் மற்றும் மீனாட்சி சவுத்ரி உடன் சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன் என பல நட்சத்திர பட்டாளங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.
கிளைமாக்ஸ் காட்சிக்காக இலங்கை செல்ல திட்டமிட்டு இருந்தது GOAT பட குழு. இதை முன்னரே அறிந்து கொண்ட, இலங்கையின் முக்கிய புள்ளி ஒருவர் விஜய்யை சந்திக்கும்படி ஆர்வம் தெரிவித்தாராம்.
இந்த சந்திப்பு நிகழும் பட்சத்தில் விஜய்யின் அரசியல் ஆசைக்கு ஆபத்து வரும் என்பதால் சந்திப்பை தவிர்க்கும் பொருட்டு படப்பிடிப்பை இலங்கையிலிருந்து வேறு இடத்திற்கு மாற்ற கட்டளையிட்டார் விஜய் என செய்திகள் வெளிவந்துள்ளன.
இலங்கையிலிருந்து ரஷ்யாவிற்கு செல்ல இருந்த பட குழு திடீரென திருவனந்தபுரத்தை முற்றுகையிட்டு உள்ளது. கிளைமாக்ஸ் காட்சிக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்டேடியமை பயன்படுத்த உள்ளதாக தகவல்.
கிளைமேக்ஸ் காட்சிக்கான படப்பிடிப்பு மார்ச் 18இல் ஆரம்பிக்க உள்ளது.
இதேவேளை அண்மையில் விஜய்யின் இலங்கை விஜயம் குறித்து செய்திகள் வெளிவந்த நிலையில், விஜய்யை சந்திக்க இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ திட்டமிட்டிருந்தார் என்ற செய்திகள் இலங்கை ஊடகங்களில் வெளிவந்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்று.
இதேவேளை, விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து மஹிந்தவின் மகனான நாமல் ராஜபக்ஸ வாழ்த்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.