தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களை முன்னேற்றும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள ‘அம்மான் படையணி’ என்ற அமைப்பை கிழக்கு மாக...
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களை முன்னேற்றும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள ‘அம்மான் படையணி’ என்ற அமைப்பை கிழக்கு மாகாணத்திலும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பிலும் குறித்த ஊடக சந்திப்பில் அவர் கருத்துரைத்திருந்தார்.
செனல் 4 தொலைகாட்சியில் ஒளிபரப்பான ஆவணப்படத்தில் தகவல் வெளியிட்டுள்ள அசாத் மௌலானாவினால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தரப்பினரால் புத்தகம் வெளியிடப்படுகின்றமைக்கான காரணம் குறித்து கேள்வி எழுவதாகவும் கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.