தென்னிந்தியா சினிமாவின் பிரபல நடிகரான டேனியல் பாலாஜி உயிரிழந்துள்ளார். மாரடைப்பு காரணமாக டேனியல் பாலாஜி உயிரிழந்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்...
தென்னிந்தியா சினிமாவின் பிரபல நடிகரான டேனியல் பாலாஜி உயிரிழந்துள்ளார்.
மாரடைப்பு காரணமாக டேனியல் பாலாஜி உயிரிழந்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரபல வில்லன் நடிகராக வளம் வந்த டேனியல் பாலாஜி நெஞ்சு வலி ஏற்பட்டு திடீர் மரணம் அடைந்தார். பொல்லாதவன், விஜயின் பைரவா உள்ளிட்ட படங்களில் டேனியல் பாலாஜி நடித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் மறக்க முடியாத வில்லன் நடிகராக வலம் வந்தவர் டேனியல் பாலாஜி. சித்தி நாடகத்தில் நடிகராக அறிமுகமான டேனியல் பாலாஜி பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.
காக்க காக்க படத்தில் ஸ்ரீகாந்த், வேட்டையாடு விளையாடு படத்தில் அமுதன் சுகுமாறன் என இவர் நடித்த வில்லன் கதாபாத்திரங்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
அதேபோல், பைரவா, வட சென்னை ஆகிய படங்களிலும் இவரது நடிப்பு தனித்துவமாக இருக்கும். அதிலும் வட சென்னையில் தம்பியாகவே வாழ்ந்து இருப்பார் டேனியல் பாலாஜி. 48-வயதான டேனியல் பாலாஜிக்கு இரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி காலமானர்.