காடுகள் மற்றும் புதுமை எனும் கருப்பொருளில் சர்வதேச காடுகள் தினம் யாழ் அரசடி சித்தி விநாயகர் முன்பள்ளியில் அண்மையில் இடம்பெற்றது. இந் நிகழ்வி...
காடுகள் மற்றும் புதுமை எனும் கருப்பொருளில் சர்வதேச காடுகள் தினம் யாழ் அரசடி சித்தி விநாயகர் முன்பள்ளியில் அண்மையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் ம.சசிகரன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு காடுகளின் முக்கியத்துவம், வனவிலங்குகளை இனங்காணல், மற்றும் வனவிலங்குகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அவற்றின் பாதுகாப்பு குறித்து கதைகள்,புகைப்படங்கள் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரசாரங்களை ஏற்படுத்தினார்.