மீசாலை வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலயத்தின் வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வு 18/3/2024 திங்கட்கிழமை பிற்பகல் 2 .00 மணிக்கு பாடசாலையின் விள...
மீசாலை வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலயத்தின் வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வு 18/3/2024 திங்கட்கிழமை பிற்பகல் 2 .00 மணிக்கு பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் அதிபர் க.இளங்கோவன் தலைமையில் இடம்பெற்றது
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக சாவகச்சேரி கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஐ.தேவஈஸ்வரன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக தென்மராட்சி கல்வி வலய செயற்பட்டு மகிழ்வோம் இணைப்பாளர் திருமதி இராசலட்சுமி மயில்வாகனசிங்கம், சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற சீர்திருத்த உத்தியோகத்தரும் தமிழ் இணையக் கல்விக் கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான க.ரஜனிகாந்தன், இராமாவில் கொடிகாமம் KKJ Tourism Developers (pvt) Ltd வி.வாகீசன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக நரசிங்கம் பாம் மற்றும் கட்டடப் பொருட்கள் உரிமையாளர் பூ.பாஸ்கரன், மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியின் ஓய்வு நிலை ஆசிரியர்களான திருமதி மஞ்சுளா மகேசன், திருமதி சாந்தநாயகி பரமலிங்கம், திருமதி ரோகிணி பரஞ்சோதி ஆகியோர் உட்பட , ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்
ஆரம்ப அப்பியாச நிகழ்வு இடம் பெற்றது அதனைத் தொடர்ந்து அணிநடை இடம்பெற்றது.
வளையம் மாற்றுவோம், சமநிலையாகச் செல்வோம், வேகமாகத் தடைதாண்டல் , வளைந்து நெளிந்து ஓடுவோம், கலப்போட்டம், சமநிலைய்க நடப்போம் ஆகிய விளையாட்டுகளும் இடைவேளை நிகழ்வுகளாக பாலர் பிரிவின் வேடம் புனைதல் கயிறிழுத்தல், பழைய மாணவர் நிகழ்வு பெற்றோர் நிகழ்வு என்பன இடம் பெற்றன
செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் பதக்கம் அணிவித்து் வெற்றிக் கேடயம் மற்றும் சான்றிதழ் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.