வடக்கு மாகாணத்திற்கான ஜனாதிபதியின் ஒருங்கிணைப்புச் செயலாளர் எல்.இளங்கோவன் விரைவில் வடக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்படவுள்ளார். வடக்கு...
வடக்கு மாகாணத்திற்கான ஜனாதிபதியின் ஒருங்கிணைப்புச் செயலாளர் எல்.இளங்கோவன் விரைவில் வடக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்படவுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் ஆளுநரின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர் பதவிகளில் பணியாற்றிய நிலையிலும், நீண்ட காலம் தொடர்ச்சியாக வடக்கில் பணியாற்றியவர் என்பதன் அடிப்படையில் கொழும்புக்கு அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக வடக்கு மாகாணத்திற்கான ஜனாதிபதியின் ஒருங்கிணைப்புச் செயலாளராகப் பணியாற்றும் எல்.இளங்கோவன் வடக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்படவுள்ளார்.
அதேநேரம் தற்போதைய பிரதம செயலாளர் சமன் பந்துலசேன கொழும்புக்கு மாற்றப்படவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.