இந்தியாவில் கடந்த ஆண்டுகளில் அ.தி.மு.க கூட்டணியில் தேர்தலை சந்தித்த சமத்துவ மக்கள் கட்சி, எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.கவுடன் கூட்டணி...
இந்தியாவில் கடந்த ஆண்டுகளில் அ.தி.மு.க கூட்டணியில் தேர்தலை சந்தித்த சமத்துவ மக்கள் கட்சி, எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக முன்னதாக சரத்குமார் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க கட்சி அலுவலகத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் சமத்துவ மக்கள் கட்சியை பா.ஜ.கவுடன் சரத்குமார் இணைத்துள்ளார்.
பா.ஜ.கவுடன் ச.ம.க கட்சி கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திவந்த நிலையில், சமத்துவ மக்கள் கட்சியை பா.ஜ.கவுடன் சரத்குமார் இணைத்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த முடிவு நாட்டின் வளர்ச்சிக்காகவும், இளைஞர்களின் வளர்ச்சிக்காகவும் எடுக்கப்பட்டதாக சரத்குமார் தெரிவித்துள்ளார்.