வடக்கில் சுகாதார துறையினர் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் சுகாதார அமைச்சருக்கு, வடக்கு மாகாண ஆளுநர் எடுத்துரைப்பு சுகாதார அமைச்சர் மருத்து...
வடக்கில் சுகாதார துறையினர் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் சுகாதார அமைச்சருக்கு, வடக்கு மாகாண ஆளுநர் எடுத்துரைப்பு
சுகாதார அமைச்சர் மருத்துவர் ரமேஷ் பத்திரனவை, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸுக்கு இடையிலான சந்திப்புக் கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை(05) கொழும்பு சுவசெரிபாயவில் அமைந்துள்ள சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.
வடக்கு மாகாணத்தில் சுகாதார துறைக்கான ஆளணி பற்றாக்குறை காணப்படுவதால் சுகாதார துறையினர் எதிர்நோக்கியுள்ள சவால்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுனரால், சுகாதார அமைச்சருக்கு எடுத்துக்கூறப்பட்டது. வடக்கில் இதுவரை நிரப்பப்படாத ஆளணி மற்றும் ஆளணி வெற்றிடங்களுக்கான மாற்றீடுகள் தொடர்பில் எதிர்வரும் சில மாதங்களுக்குள் தீர்வு பெற்றுத்தரப்படும் என வடக்கு மாகாண ஆளுநரிடம், சுகாதார அமைச்சர் மருத்துவர் ரமேஷ் பத்திரன இச்சந்திப்பின்போது உறுதியளித்தார்.
அதேவேளை மத்திய சுகாதார அமைச்சின் செயலாளர் மருத்துவர் பி.ஜி.மஹிபாலவும் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது