வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வடகொரியா, இன்று காலை கிழக்கு கடற்கரையில் குறுகிய தூரம் சென்று...
வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
வடகொரியா, இன்று காலை கிழக்கு கடற்கரையில் குறுகிய தூரம் சென்று தாக்கியழிக்கும் பொலிஸ்டிக் ஏவுகணைகளை செலுத்தி சோதனை நடத்தியுள்ளது.
உள்ளூர்நேரப்படி இன்று (19) காலை 7.44 மணியளவில் இரண்டு ஏவுகணைகளை ஒரே நேரத்தில் சோதனை நடத்திய நிலையில், 37 நிமிடங்கள் கழித்து மேலும் ஒரு ஏவுகணை சோதனை நடத்தியதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.
உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வட கொரியா அடிக்கடி அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது.
இந்நிலையில், நேற்று (18) அடுத்தடுத்து 3 ஏவுகணைகளை சோதனை செய்தது.
தென்கொரியாவும் அமெரிக்காவும் அவ்வப்போது மேற்கொண்டுவரும் கூட்டுப் போர் பயிற்சிகள், வடகொரியாவுக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன.
கடைசியாக கடந்த மாதத்தில், வடகொரியா ஏவுகணைகளை சோதனை மேற்கொண்டது.
தற்போது மீண்டும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டுள்ளதால், கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த ஏவுகணை சோதனைக்கு ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா கண்டனம் தெரிவித்துள்ளார்.