முதன்முறையாக மருந்துவில்லைகள், ஊட்டச்சத்து வில்லைகள் என்பவற்றை யாழ்ப்பாணத்தில் உற்பதி செய்யும் மெட்டோபொலொஜி (Metabology) நிறுவனம் நேற்று உத...
முதன்முறையாக மருந்துவில்லைகள், ஊட்டச்சத்து வில்லைகள் என்பவற்றை யாழ்ப்பாணத்தில் உற்பதி செய்யும் மெட்டோபொலொஜி (Metabology) நிறுவனம் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம், கொட்டடிப் பகுதியில் உள்ள சிவபண்ணை வீதியில் இந்த உற்பத்தி நிறுவனத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று(09) நடைபெற்றது.
யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகவும், பிரித்தானியாவில் பிறந்தவருமான அர்னன் மனோஜ் ஜோஹில் என்ற இளைஞரே , சுமார் 20 மில்லியன் அமெரிக்க டொலரை முதலீட்டில் இந்த நிறுவனத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்துள்ளார்.
வடக்கில் உள்ள இளையோருக்கு தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்துவதையும், உள்ளூர் விளைபொருட்களுக்கான ஏற்றுமதி வாய்ப்பையும் பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மருந்துவகைகள் மானிய அடிப்படையில் இலங்கை மக்களுக்கு விநியோகிக்கப்படும். பொருளாதார நெருக்கடியால், இலங்கையில் மருந்துவகைகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவும் இந்தக் காலகட்டத்தில் மானிய விலையில் சர்வதேசத் தரம் வாய்ந்த மருந்துவகைகளையும், ஊட்டச்சத்து மாத்திரைகளையும் பெறும் வாய்ப்பை நாம் ஏற்படுத்தியுள்ளோம்” என்று ஆரம்ப நிகழ்வின் போது மெட்டோபோலொஜி நிறுவனத் தலைமை அதிகாரியான அர்னன் மனோஜ் ஜோஹில் தெரிவித்தார்.