நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகள் அனைத்தும் இந்த மாதம் 6 நாட்கள் மூடப்படவுள்ளன. இதன்படி, சித்திரை புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 13 மற்றும...
நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகள் அனைத்தும் இந்த மாதம் 6 நாட்கள் மூடப்படவுள்ளன.
இதன்படி, சித்திரை புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 13 மற்றும் 14ம் திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படும் என கலால்வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், பௌர்ணமி தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 23ம் திகதி மதுபானசாலைகள் மூடப்படவுள்ளன.
மேலும், 21ம் திகதி முதல் 27ம் திகதி வரை வெசக் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த காலப் பகுதியில் மதுபானசாலைகளை மூடுவதற்கான அமைச்சரவை பத்திரமொன்றை புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க முன்வைத்ததுடன், அதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, இம்மாதம் 22, 23 மற்றும் 24 ம் திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படவுள்ளது.