சுழிபுரம் மேற்கு கலைமகள் விளையாட்டு கழகத்தின் இளைப்பாறு மண்டபம் மற்றும் வேளாண் களஞ்சிய அறைக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று காலை 11 மணியளவில...
சுழிபுரம் மேற்கு கலைமகள் விளையாட்டு கழகத்தின் இளைப்பாறு மண்டபம் மற்றும் வேளாண் களஞ்சிய அறைக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று காலை 11 மணியளவில் கலைமகள் விளையாட்டு கழகத்தின் தலைவர் கு.சர்மிலன் தலைமையில் இடம்பெற்றது.
இதன் பொழுது கலைமகள் விளையாட்டு கழகத்தின் பசுமை புரட்சி திட்ட குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்றிட்டத்தின் ஓர் பகுதியாக பிரபல தொழிலதிபர் அமரர் வேலுப்பிள்ளை பொன்னம்பலம் அவர்களது புதல்வன் பொன்னம்பலம் பத்மாதரனின் அனுசரனையில் விளையாட்டு வீரர்களுக்கான இளைப்பாறு மண்டபம் மற்றும் களஞ்சிய அறைக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் சம்பிரதாய பூர்வமாக இடம்பெற்றது.