யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் 18 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பெற்றப்பட்டுள்ளது. சாவகச்சேரி நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் 7 நாட்கள்...
யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் 18 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பெற்றப்பட்டுள்ளது.
சாவகச்சேரி நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் 7 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த இருவரிடம் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த கஞ்சா கைபெற்றப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை செம்மணி பகுதியில் வானொலி பெட்டியில் வைத்து 3 கிலோகிராம் கஞ்சாவினை ஒருவர் கடத்த முற்பட்ட நிலையில் அவர் யாழ்மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் மன்னார் பேசலை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் அதனை பதுக்கி வைத்திருந்த இருவரையும் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இதேவேளை கஞ்சா கடத்த பயன்படுத்த பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் வானொலி பெட்டியையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
யாழ்மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் காளிங்க ஜெயசிங்கவின் வழிகாட்டலில் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பதில் தலமை பொலிஸ் அதிகாரி வெ.நந்தகுமார் தலமையில் இவ் கைது நடவடிகையில் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை இன்று யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தவுள்ளனர்.
கடந்த 30ஆம் திகதி சாவகச்சேரியில் வைத்து 4 கிலோகிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த நபர்களிடம் பொலிஸார் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த கஞ்சாவினை செம்மணி மற்றும் மன்னார் பகுதியில் போலீசார் மீட்டுள்ளனர்.