”முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்திய அதிசொகுசு வாகனமான ரேஞ்ச் ரோவரை மொடல் அழகியான பியூமி ஹன்சமாலி பயன்படுத்திய விவகாரம் பெரும் ச...
”முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்திய அதிசொகுசு வாகனமான ரேஞ்ச் ரோவரை மொடல் அழகியான பியூமி ஹன்சமாலி பயன்படுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து உடனடியாக விசாரணையை முன்னெடுக்குமாறு” சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவில் இன்று (17) முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
Mage Rata அமைப்பின் தலைவரான சஞ்சய மஹவத்தவினாலேயே குறித்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டில் “தேர்தல் நெருங்கிவிட்டது என்பது தெளிவாகிறது, அரசியல்வாதிகள் தாம் சேமித்த கறுப்புப் பணத்தை வரவிருக்கும் தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்த முனைகின்றார்கள். அதன்படி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்திய அதிசொகுசு வாகனமான ரேஞ்ச் ரோவரை பியூமி ஹன்சமாலி எவ்வாறு பெற முடிந்தது என்பதில் எங்களுக்கு சில சந்தேகங்கள் உள்ளன.