யாழ்ப்பாணம் திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் வீடொன்றினுள் புகுந்து வன்முறை கும்பலொன்றினால் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டடது. குறித்த கும்பலால்...
யாழ்ப்பாணம் திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் வீடொன்றினுள் புகுந்து வன்முறை கும்பலொன்றினால் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டடது.
குறித்த கும்பலால் வான் கண்ணாடிகள் நொருக்கப்பட்டதுடன் மோட்டார் சைக்கிளொன்றும் எரியூட்டப்பட்டது. பெரியளவில் வாகனங்களுக்கு சேதம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. தனிப்பட்ட முரண்பாடே தாக்குதலுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது