யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி சார்பாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக ...
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி சார்பாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயம் காரணமாக சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியிலிருந்து இலங்கை அணியின் சகலத்துறை வீரர் வனிந்து ஹசரங்க விலகுவதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.
இந்த நிலையில், அந்த வெற்றிடத்திற்கு வியாஸ்காந்த் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
வியாஸ்காந்தை இணைத்துக் கொள்வதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான அனுமதி, ஓரிரு தினங்களில் கிடைக்கப்பெறும் எனவும் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியின் உயர் அதிகாரி குறிப்பிட்டார்.