அனுமதியின்றி மே தினக் கொண்டாட்டங்களை காணொளி பதிவு செய்ய ட்ரோன்களை பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு ட்...
அனுமதியின்றி மே தினக் கொண்டாட்டங்களை காணொளி பதிவு செய்ய ட்ரோன்களை பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு ட்ரோன்களை பயன்படுத்துவதற்கு அவசியமானால் அதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துத தெரிவித்துள்ளார்.
இந்த சட்டம் நாடளாவிய ரீதியில் நடைபெறும் அனைத்து மே தின பேரணிகளுக்கும் பொருந்தும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.