வவுனியா - சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் ஆசிரியர் தாக்கியதில் 2 ஆம் தரத்தில் கல்வி பயிலும், மாணவன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி...
வவுனியா - சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் ஆசிரியர் தாக்கியதில் 2 ஆம் தரத்தில் கல்வி பயிலும், மாணவன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் நேற்று ( 03) பதிவாகியுள்ளது.
மாணவனுக்கு உயிரெழுத்துக்கள் தெரியாத காரணத்தினால் ஆசிரியர் தாக்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஆசிரியர் தாக்கியதில் மாணவனின் நெற்றியில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், தலை மற்றும் கண்கள் பாதிப்படைந்துள்ளதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகம், காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளதுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.