பாடசாலை மாணவியர்களுக்கான செனிட்டரி நெப்கீன்(Sanitary Napkin) வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இத...
பாடசாலை மாணவியர்களுக்கான செனிட்டரி நெப்கீன்(Sanitary Napkin) வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது குறித்து அமைச்சர் பந்துல குணவர்த்தன கருத்துத் தெரிவிக்கையில் ”நாட்டில் மொத்தம் 04 மில்லியன் பேர் பாடசாலை மாணவர்களாக இருக்கிறார்கள். அவர்களில் 1.2 மில்லியன் மாணவிகள் பூப்படைந்தவர்களாக் கணக்கிடப்பட்டுள்ளது.
குறித்த மாணவியர்களில் மிகவும் பின்தங்கிய பாடசாலைகள், அணுகல் வசதி குறைந்த பாடசாலைகள், தோட்டப் பாடசாலைகள் மற்றும் வறுமைப்பட்ட மாணவர்களைக் கொண்டுள்ள நகர்ப்புறப் பாடசாலைகளில் கல்வி பயிலும் 5 இலட்சம் மாணவிகளுக்கு இந்த மாதம் முதல் செனிட்டரி நெப்கீன்களை வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்காக ஆண்டுதோறும் செனிட்டரி நெப்கீன் வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.