கணவர் வெளிநாட்டில் உள்ள நிலையில் இளம் பெண் ஒருவர் தனது 2 பிள்ளைகளையும் தவிக்கவிட்டு, காதலனுடன் சென்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். குருநாகல...
கணவர் வெளிநாட்டில் உள்ள நிலையில் இளம் பெண் ஒருவர் தனது 2 பிள்ளைகளையும் தவிக்கவிட்டு, காதலனுடன் சென்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
குருநாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும்தெரியவருகையில்,
தனது 7 வயது மகளையும் 2 வயது ஆண் குழந்தையையும் பாதுகாப்பின்றி வீட்டில் விட்டுவிட்டு காதலனுடன் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பிள்லைகளை விட்டுச்சென்ற பெண்ணை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த பெண்ணின் கணவர் 5 மாதங்களுக்கு முன்னர் மத்திய கிழக்கு நாட்டிற்கு வேலைக்குச் சென்று் நிலையில் இரண்டு பிள்ளைகளுடன் பெண் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் 2 பிள்ளைகள் அழுதுகொண்டிருப்பதைக் கண்ட அயல் வீட்டு பெண்ணின் உறவினர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.