இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முதலாவது வெளியேற்றல் போட்டியில் (Eliminator) ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில...
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முதலாவது வெளியேற்றல் போட்டியில் (Eliminator) ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
குறித்த போட்டியில் ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகள் மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இந்த நிலையில் 173 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 19 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இதற்கமைய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி அடுத்த சுற்றுக்குத் தெரிவாகியுள்ள நிலையில் ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.