யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை சுருவில் பகுதியில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையத்தை அகற்ற கோரி அப்பகுதி மக்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர...
யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை சுருவில் பகுதியில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையத்தை அகற்ற கோரி அப்பகுதி மக்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
பாடசாலைகள் , ஆலயங்கள் , தேவாலயங்கள், நீதிமன்றம், பொலிஸ் நிலையம் என்பவற்றுக்கு அருகில் குறித்த மது விற்பனை நிலையம் காணப்படுவதால் , பல சமூகப் புரள்வான நடவடிக்கைகள் ஊர்காவற்துறை பிரதேசத்தில் அதிகரித்துள்ளது. எனவே தீவக மக்களின் நலன் கருதி குறித்த மது விற்பனை நிலையத்தை அகற்ற கோரி இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அதேவேளை குறித்த மது விற்பனை நிலையத்தில் , இரவு வேளைகளில் நேரம் தாழ்த்தியும் விற்பனைகள் இடம்பெறுவதாகவும் , பௌர்ணமி தினங்கள் உள்ளிட்ட , மதுவரி திணைக்களத்தால் மதுபானசாலைகளை மூட உத்தரவிடப்படும் நாட்களிலும் மது விற்பனை இடம்பெறுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.