குளியாப்பிட்டிய பிரதேசத்தில் இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது காதலி கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கு உதவியமை மற்று...
குளியாப்பிட்டிய பிரதேசத்தில் இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது காதலி கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலைக்கு உதவியமை மற்றும் குற்றத்தை மறைத்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த இளைஞன் கடந்த 22ஆம் திகதி தனது காதலியைச் சந்திக்கச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்தார்.
பின்னர் காணாமல் போன இளைஞனின் சடலம் சிலாபம் - மாதம்பே பிரதேசத்தில் மீட்கப்பட்டிருந்தது.
அதேநேரம் சம்பவம் தொடர்பில் குளியாப்பிட்டிய வஸ்ஸாவுல்ல பகுதியைச் சேர்ந்த காதலியின் தந்தையான 'சிங்கிதி' என அழைக்கப்படும் சுஜித் பெர்னாண்டோ மற்றும் அவரது மனைவி டிலானி ரசிகா ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.