முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, தனது வீட்டிலிருந்து தலைமறைவாகியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம், கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, தனது வீட்டிலிருந்து தலைமறைவாகியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம், கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
வெளிநாட்டு கடவூச்சீட்டு விவகாரம் ஒன்றில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே சந்தேகநபராக பெயரிட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களம், கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதன்படி, சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கையை எடுக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் திலின கமகே, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த நிலையிலேயே, டயனா கமகே தங்கியிருந்த வீட்டிலிருந்து அவர் தலைமறைவாகியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம், நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.