குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) ஐஸ் (methamphetamine) வைத்திருந்த குற்றச்சாட்டில் திணைக்களத்தில் கடமையாற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் பணி...
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) ஐஸ் (methamphetamine) வைத்திருந்த குற்றச்சாட்டில் திணைக்களத்தில் கடமையாற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக லங்காதீப தெரிவித்துள்ளது.
கொம்பனவீதி குமரன் இரத்தினம் வீதியிலுள்ள மதுபானசாலைக்கு அருகில் 130 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த அதிகாரிகளை கொம்பன்னவீதி பொலிஸ் லஞ்ச ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவின் கான்ஸ்டபிள்களாக கடமையாற்றுவது விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கு, போதைப்பொருள் வைத்திருந்த நபருடன் இருந்த மற்றைய கான்ஸ்டபிள் போதைப்பொருளுக்கு அடிமையானவரா என்பதை அறிய நீதித்துறை வைத்திய அதிகாரியிடம் அறிக்கை கோரவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கொம்பன்னவீதி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.