ISIS அமைப்பின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் நான்கு இலங்கையர், இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்ட...
ISIS அமைப்பின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் நான்கு இலங்கையர், இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சந்தேகநபர்களை குஜராத் பயங்கரவாத தடை பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை பாதுகாப்பு பிரிவினர் விசாரணைகளுக்காக அழைத்து சென்றுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் இந்தியாவிற்குள் வந்தமைக்கான நோக்கம் தெளிவில்லை என இந்திய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, விமான நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.