இலங்கை ISIS உறுப்பினர்களுக்கு இந்தியாவிலிருந்து பணம் வைப்பிலிடப்பட்டுள்ளமை குறித்து தகவல்

இலங்கை ISIS உறுப்பினர்களுக்கு இந்தியாவிலிருந்து பணம் வைப்பிலிடப்பட்டுள்ளமை குறித்து தகவல்

ISIS பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் கீழ், இந்தியாவில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களுடன் தொடர்புகளை வைத்திருந்த குற்றச்சாட்...

ISIS பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் கீழ், இந்தியாவில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களுடன் தொடர்புகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் மாவனெல்ல பகுதியில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களினதும் வங்கி கணக்குகளுக்கு இந்தியாவிலிருந்து பணம் வைப்பிலிடப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தியாவிலிருந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர், இவர்களது வங்கி கணக்குகளுக்கு பணத்தை வைப்பிலிட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

இவ்வாறு வைப்பிலிடப்பட்ட பணத்தை, குறித்த இரண்டு சந்தேகநபர்களும், தற்போது தீவிரமாக தேடப்பட்டு வரும் தெமட்டகொட ஜெராட் புஸ்பராஜா ஒஸ்மன் ஜெராட் என்ற நபரிடம் வழங்கியுள்ளனர்.


இந்த பணத்தை தெமட்டகொட ஜெராட் புஸ்பராஜா ஒஸ்மன் ஜெராட் என்ற நபர், இந்தியாவில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நால்வரிடமும் கொடுத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.

மாவனெல்ல பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுடன் சேர்த்து, இந்த சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள ஐந்து சந்தேகநபர்களும், அஹமதாபாத்தில் கைது செய்யப்பட்ட நால்வருக்கும் இந்தியா செய்ய வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.


அஹமதாபாத்தில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களும், இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதலை நடாத்த திட்டமிட்டிருந்தமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக அந்த நாட்டு பாதுகாப்பு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள நான்கு இலங்கையர்களும், இந்தியாவிற்கு செல்வற்கு முன்னர் கொழும்பு – மாளிகாவத்தை பகுதியிலுள்ள ஒரு இடத்தில் ஒன்று கூடி கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

இவர்கள் சந்திப்பு நடாத்திய போது, எடுக்கப்பட்ட புகைப்படங்களை, அவர்களது கையடக்கத் தொலைபேசியிலிருந்து இந்திய பாதுகாப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். 

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,112,Astrology,30,cinema,260,doctor,13,Gallery,130,india,402,Jaffna,3564,lanka,8930,medical,7,Medicial,39,sports,373,swiss,15,technology,80,Trending,4409,Videos,10,World,610,Yarlexpress,4317,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: இலங்கை ISIS உறுப்பினர்களுக்கு இந்தியாவிலிருந்து பணம் வைப்பிலிடப்பட்டுள்ளமை குறித்து தகவல்
இலங்கை ISIS உறுப்பினர்களுக்கு இந்தியாவிலிருந்து பணம் வைப்பிலிடப்பட்டுள்ளமை குறித்து தகவல்
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgrmn5uRMnTQQgNzv1YIGgGm9AjOT2WInJ9StzMmQXgUKDyKZCf6AxCbANXMlRfMBL3OGWo00-SKeebJPQZeDnpMBwjO8R5zmc1DuGfU7Dt-AnEPhvJ_NyB363ugoJmxhFmiyFDWzDeImtqAouXWa4cRfVhQPTdjMeZK8h-yfMAecKgN7hILAjyevl-X8xy=w640-h370
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgrmn5uRMnTQQgNzv1YIGgGm9AjOT2WInJ9StzMmQXgUKDyKZCf6AxCbANXMlRfMBL3OGWo00-SKeebJPQZeDnpMBwjO8R5zmc1DuGfU7Dt-AnEPhvJ_NyB363ugoJmxhFmiyFDWzDeImtqAouXWa4cRfVhQPTdjMeZK8h-yfMAecKgN7hILAjyevl-X8xy=s72-w640-c-h370
Yarl Express
https://www.yarlexpress.com/2024/05/isis_30.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2024/05/isis_30.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content