குருநாகல் – மாவத்தகம பகுதியில் யுவதியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள...
குருநாகல் – மாவத்தகம பகுதியில் யுவதியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட ஆசிரியரிடம் மாவத்தகம பொலிஸார் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.
மாவத்தகம பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையிலுள்ள மேலதிக வகுப்பிற்கு, 19 வயதான யுவதி ஒருவர் வருகைத் தந்திருந்ததுடன், அந்த சந்தர்ப்பத்தில் ஆசிரியர் அங்கிருந்துள்ளதாக தெரிய வருகிறது.
இந்த நிலையில், குறித்த மேலதிக வகுப்பு அமைந்துள்ள கட்டிடத்தில் மின்குமிழ்கள் அணைக்கப்பட்டிருந்துள்ளதை அருகாமையிலுள்ள கட்டிடத்தில் பணிப் புரிந்தவர்கள் அவதானித்துள்ளனர்.
இதையடுத்து, ஏற்பட்ட சந்தேகத்தினால், குறித்த இடத்தை சோதனைக்கு உட்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்போது, மேலதிக வகுப்பிற்கு சென்ற யுவதியை, குறித்த ஆசிரியர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திக்கொண்டிருந்த நிலையில், அவரிடமிருந்து யுவதியை பிரதேச மக்கள் மீட்டுள்ளனர்.
குறித்த யுவதிக்கு போதையை ஏற்படுத்தும் பானமொன்றை வழங்கியுள்ளதாக குறிப்பிடுகின்ற பிரதேசவாசிகள், அவ்வாறான ஒரு வகை பொருள் கைப்பற்றப்பட்டதாக கூறியுள்ளனர்.
இதையடுத்து, சம்பவம் குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சந்தேகநபரை பொலிஸார், பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
அபிவிருத்தி அதிகாரியாக செயற்படும் குறித்த மேலதிக வகுப்பு ஆசிரியர், மாவத்தகம – அரங்பொல பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மாவத்தகம பொலிஸார் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.