நடைபெறவுள்ள LPL போட்டியில் விளையாடவுள்ள தம்புள்ள தண்டர்ஸ் அணியின் உரிமத்தை, உடன் அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக...
நடைபெறவுள்ள LPL போட்டியில் விளையாடவுள்ள தம்புள்ள தண்டர்ஸ் அணியின் உரிமத்தை, உடன் அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக லங்கா பிரிமியர் லீக் குழு தெரிவிக்கின்றது.
LPL போட்டியின் வெளிப்படைத்தன்மை மற்றும் தரத்தை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக LPL ஏற்பாட்டு குழுவின் தலைவர் அனில் மொஹான் தெரிவிக்கின்றார்.
Imperial Sports Group நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியான தம்மி ரஹூமான் எதிர்நோக்கியுள்ள சட்ட பிரச்சினையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, LPL போட்டியில் தம்புள்ள தண்டர்ஸ் அணியின் உரிமத்தை, வேறொரு தரப்பிற்கு வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
புதிய தரப்பின் கீழ், தம்புள்ள தண்டர்ஸ் அணி விளையாடுவதற்கான இயலுமை கிடைக்கும் என கூறப்படுகிறது.
ஆட்ட நிர்ணயம் தொடர்பான யோசனைகளை முன்வைக்க முயற்சித்துள்ளதாக குற்றம்சுமத்தியே, குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.