வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் ஆடிவேல் விழா உற்சவத்தை முன்னிட்டு, கதிர்காமத்துக்கான குமுண தேசிய பூங்கா ஊடான காட்டுப்பாதை...
வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் ஆடிவேல் விழா உற்சவத்தை முன்னிட்டு, கதிர்காமத்துக்கான குமுண தேசிய பூங்கா ஊடான காட்டுப்பாதை இன்று திறந்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இந்த பாதையை இன்று திறந்து வைத்துள்ளார்.
விசேட பூஜை வழிபாடுகளை அடுத்து, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் இன்று காலை 6 மணியளவில் இந்த பாதை திறந்து வைக்கப்பட்டது.
பாதையாதிரிகளுக்காக பிரதேச செயலகம், பிரதேச சபை, சுகாதார அமைச்சு, பொலிஸ் மற்றும் இராணுவத்தின் மேற்பார்வையுடன் மருத்துவம், நீர் வழங்கல், தங்குமிடம் மற்றும் சுகாதார வசதிகளும் ஆளுநரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.