இலங்கை விளையாட்டுதுறை அமைச்சினால் நடாத்தப்பட்ட 48 வது தேசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான கூடைப்பந்தாட்ட போட்டியில் வடமாகாண அணியுடன் ...
இலங்கை விளையாட்டுதுறை அமைச்சினால் நடாத்தப்பட்ட 48 வது தேசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான கூடைப்பந்தாட்ட போட்டியில் வடமாகாண அணியுடன் மோதிய மேல்மாகாண அணி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் ஆரம்பம் முதல் மேல்மாகாண மற்றும் வடமாகாண அணி வீரர்கள் தமது அணிக்கான புள்ளிகளை பெற்று கொடுப்பத்தில் ஆர்வம் காட்டினர்,இதனால் போட்டி இறுதி கட்டம் வரை விறுவிறுப்பாக சென்றது.
கடுமையான போட்டியின் பின்னர் 56க்கு 56 என்று போட்டி சமநிலையில் வர மேலதிக நேரம் 5 நிமிடம் வழங்கப்பட்டது.
மேலதிகமாக வழங்கப்பட்ட 5 நிமிடத்தில் 66ற்கு 63 என்ற அடிப்படையில் 3 புள்ளிகளை அதிகம் பெற்று மேல்மாகாண அணி வெற்றியை தன்வசமாக்கியது, இறுதி வரை போராடிய வடமாகாண அணி இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது.
இலங்கை கூடைப்பந்தாட்ட அணியை பிரநிதித்துவம் செய்யும் கூடைப்பந்தாட்ட வீரர்களை கொண்டு களமிறங்கிய மேல்மாகாண அணியை இறுதி வரை அச்சத்தில் வைத்துக்கொண்ட வடமாகாண பெண்கள் அணிக்கு பயிற்றுவிப்பாளர்களாக ரி .சிவதாஸ், தனுஸ்காந்த் சோபனா போன்றவர்கள் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.